விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி வேலுப்பிள்ளையை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக, தாம் பல்வேறு தரப்பிலிருந்தும் விசாரிக்கப்படுவதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,
நாட்டின் எந்த சட்டதிட்டங்களையும் மீறாத வகையிலேயே நான் பிரபாகரனின் தாயாரை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றேன். இலங்கை குடிவரவு, குடியகல்வு அமைச்சகமே அவருக்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டை எவ்வித பிரச்சினையுமின்றி வழங்கியது.
ஆனால், தற்போது பிரபாகனின் தயாரை ஏன் அழைத்துச் சென்றீர்கள்? எங்களிடம் ஏன் அனுமதி பெறவில்லையென்றும் பல்வேறு மட்டங்களில் விசாரிக்கின்றனர்.
பிரபாகரனின் தாயாரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிட்டு நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்தும் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டேன். அதன் பின்னர் தற்போது தொலைபேசி ஊடாகவும் தொடர்ந்தும் என்னை விசாரித்து வருகின்றனர். இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்றார்.
நக்கீரன்



தேசியத்தலைவரின் தாயாரை வைத்து தலைவரைப்பற்றி தகவல் அறியவே இந்த விடுதலை நாடகம்,தலைவர் பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதை அறியாதவர்கள் நடத்தும் நாடகம் எப்போதும் அரங்கேறாது.