Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் தேசிய கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் பற்றி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனிநாட்டுக்கான கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள இவ் ஊடகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட தீர்வு பகிரப்பட்ட இறையாண்மையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளன.

சிஎன்என் பிபிசி ஏஎப்பி போன்ற ஊடகங்கள் உட்பட பல ஊடகங்களில் இவ்விடயம் தொடர்பான செய்திகள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் நேரடியாக வெளிநாடுகளிடமிருந்து நிதியை தமிழர் தாயகத்திற்கு பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்களை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி

1. தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம். அவர்கள் இலங்கைத் தீவில், சிங்கள மக்களுடனும், ஏனையோருடனும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
2. தொடர்ச்சியான வடக்குகிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாகும்.
3. தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.
4. அதிகாரப் பங்கீடானது இணைந்த வடக்குகிழக்கு மாகாணத்தில், சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையில் நிறுவப்படவேண்டும். இது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
5. அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் உட்பட சமூக, பொருளாதார அபிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
6. புதிய தொழிற்துறைகளை உருவாக்கவும் மற்றும் எமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கவும், வடக்குகிழக்கில் நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும்.

போன்ற விடயங்களை சுட்டிக்காட்டியுள்ள அவ் ஊடகங்கள் அதற்கு மிக முக்கியத்துவமும் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலமைந்த வாழ்விடப் பிரதேசங்களில் சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசியல் தீர்வொன்றை ஐக்கிய இலங்கைக்குள் கண்டெடுப்பதற்கும் பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும் என விடுதலைப்புலிகளாலும் அப்போதைய சிறிலங்கா அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒஸ்லோ தீர்மானத்திற்கு அமைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தீர்வு யோசனைகளை முன்வைத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

0 Responses to தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com