தமிழர்ளின் தேசம் சிங்களவர்களின் தேசம் என இரண்டு தனியான தேசங்களை கொண்ட ஒரு நாடு என்ற அடிப்படையில்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்திவருவதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்போடு தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்ட அவர் ஊடகங்கள் தவறாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அர்த்தப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டார்.நான்கு அடிப்படையான விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ளதாகவும் தனியான தமிழர்களுக்கான தாயகம் தனித்துவமான தேசிய இனம் சுயநிர்ணய உரிமை மற்றும் மற்றும் இலங்கைத்தீவில் வாழும் அனைவருக்குமான குடியுரிமை என்பவையே அவையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமிழர்களுக்கான தீர்வானது அமெரிக்காவுக்கும் பியூட்டே றைசோ (Puerto Rico) க்கும் இடையில் உள்ளது போன்றதாக – அதாவது ஒரு பாஸ்போட் ஆனால் இரண்டு தேசங்கள் – இருக்கும். ஒரு நாடாகவும் இரண்டு தேசங்களாகவும் அது இருக்கும் எனவும் விளக்கமளித்தார்.
மலையகத்தில் குடியுரிமையின்றி உள்ள தமிழ் மக்களும் தமிழர்களின் தேசத்தில் குடியுரிமையை பெறுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



0 Responses to தமிழர்களின் தேசம் சிங்களவர்களின் தேசம் - இதுவே கூட்டமைபின் நிலைப்பாடு சொல்கிறது கனேடிய தமிழ் காங்கிரஸ்