சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரைவில் இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத் துள்ளார். ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளிவிகாரச் செயலர் நிரூபமா ராவ் ஊடாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.நடந்து முடிந்த தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவின் வெற்றிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் வாழ்த்தைத் தெரிவித்த நிருபாமா, இந்த வெற்றியானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எதிர்கால உறவின் மேம்பாட்டுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதி மஹிந்தாவை முற்கூட்டியே சந்திக்க விரும்புகிறார் எனவும் நிருபாமா தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள ஏற்கனவே திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை ரஷ்யாவுக்கு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to இந்தியாவுக்கு வருமாறு மகிந்தவுக்கு மன்மோகன் சிங் அழைப்பு