வன்னிப்பகுதியில் மக்களால் கைவிடப்பட்ட பொருட்கள் கள்ளச்சந்தையில் மிகக் குறைந்த விலையில் சிறீலங்காப் படையினரால் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. கடந்தகாலத் தொடர் இன அழிவுப் போரினைத் தொடர்ந்து மக்கள் தமது அனைத்துச் சொத்துக்களையும் இழந்த நிலையில் கைகளில் கிடைத்த பொதிகளுடனேயே படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் மக்கள் கைவிட்டு வந்த அனைத்துப் பொருட்களும் சிறீலங்காப் படை அதிகாரிகள் சிலரால் சூறையாடப்பட்டு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுவருவதாக அங்கு மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட குடிமகன் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பொருட்களை விற்பனை செய்வதற்கென அங்கு குடியேறியுள்ள மக்களையே முகவர்களாக அவர்கள் பயன்படுத்திவருவதாக குறிப்பிட்ட அந்நபர்,
வீட்டின் தளபாடங்கள் மற்றும், வாகனங்கள், வீட்டுப்பாவனைப் பொருட்கள், ஜன்னல்கள், கதவுகள், இரும்புக்கம்பிகள் அனைத்தும் இடிக்கப்பட்டு விற்கப்பட்டுவருவதாகவும், வாகனங்களின் உதிரிப்பாகங்களும் குறைந்த விலையில் விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அங்கிருக்கும் மக்கள் தயக்கம் தெரிவிக்கின்ற நிலையில் தென்னிலங்கையில் இருந்து செல்கின்ற வர்த்தகர்களே கூடியபொருட்களை விலைகொடுத்துப் பெற்றுச் செல்வதாக அவர் தெரிவிக்கின்றார்.



0 Responses to வன்னியில் மக்கள் விட்டுச்சென்ற பொருட்கள் சிறிலங்கா இராணுவத்தால் விற்பனை!