நேற்று அவரால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவத்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இன்று அரசு தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைத் தீர்வுத்திட்ட விடயத்தில் கூட அக்கறை காட்டவில்லை. குறிப்பாக முன்னர் பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட தீர்வுகளை கூட அரசு தரத்தயாராகவில்லை.
போர்க்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலசட்டத்தை நீக்காமல் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்திவருகின்றது. அவசரகாலச்சட்டத்தை நீக்கினால் 10000 புலிச்சந்தேகநபர்களை விடுவிக்கவேண்டிவரும் என அமைச்சர் கூறுகிறார்.
ஆனால் அவர்கள் அனைவரும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படவேண்டும். தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் பல சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றன. இவை அனைத்தும் அரசினால் தூண்டிவிடப்பட்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கவே போட்டியிடுகின்றன.



0 Responses to ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் - ஐ.தே.க வேட்பாளர் திருமதி மகேஸ்வரன்