டெயிலி மிரர் ஊடகத்திற்கு பேட்டியளித்த சுரேஸ் பிரேமசந்திரன் மேலும் தெரிவித்ததாவது
புலத்து தமிழர்கள் வடக்கு கிழக்கு தாயக பிரதேசத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். இவ்வாறான காரணங்களால் அதற்கான அதிகாரங்கள் தமிழர் தரப்பு பகிரப்படவேண்டும். அப்போது வரி விதிப்பு தொடர்பான விடயங்களையும் நாங்கள் செய்யவேண்டிவரும். புலத்து தமிழர்களின் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கமுடியும். அது தமிழர்களின் பொருண்மிய வளத்தை உயர்த்தும்.
நிதி தொடர்பான அதிகாரங்கள் இந்தியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பிராந்தியங்களுக்கு பகிரப்பட்டுள்ளபோதிலும் பிரிவினையை அது ஊக்கப்படுத்தவில்லை.
இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு தாயகத்திற்கான அதிகாரங்களை தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள சிங்கள தலைமை முன்வராவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் காந்திய வழியிலான போராட்டங்களை கூர்மைப்படுத்தும். அவ்வாறான போராட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்களாகவும் சத்தியாக்கிரக போராட்டங்களாகவும் இருக்கும்.



0 Responses to புலத்து தமிழர்களிடமிருந்து தமிழர் தாயகத்திற்கு நேரடியான நிதியுதவிகள் வழங்கப்படவேண்டும்: சுரேஸ்