யாழ்ப்பாணம், வல்வெட்டி துறையில் நிமலனேந்திரா சினிமா தியேட்டர் மிகவும் பிரபலமானது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தியேட்டர் முழுவதும் தீயில் எரிந்தது.தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தாலும், தியேட்டர் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.



0 Responses to வல்வெட்டிதுறை நிமலனேந்திரா தியேட்டர் எரிந்து சாம்பல்