சரத் பொன்சேகா மீதான முதல் கட்ட விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா முதன் முறையாக இராணுவ நீதிமன்றில் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடற்படைத் தலைமைகயத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் போது பொன்சேகாவுடன் அவரது சட்டத்தரணிகளும் இருந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்தது.
பொன்சேகா மீதான இரண்டாம் கட்ட விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ளன.ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று பாணந்துறையில் ஜனநாயக தேசிய முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டதில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.



0 Responses to பொன்சேக நீதிமன்றத்தில் ஆஜர்--ஆர்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு