அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ் மக்கள் தொடர்பில் அந்த கட்சியின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றமாகவே நோக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த மாதம் 24 ஆம் நாள் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் கொன்சேவேட்டிவ் கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹெக் கலந்துகொண்டு உரையாற்றியது சிறீலங்காவில் நடைபெற்ற மோதல்கள் தொடர்பில் அந்த கட்சியில் ஏற்பட்ட கொள்கை மாற்றமாக கருதப்படுகின்றது.
ஈழத்தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட நிகழ்வு ஒன்றில் கொன்சவேட்டிவ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டது இதுவே முதல் தடவை என அனைத்துலக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறீலங்கா தொடர்பில் கொன்சவேட்டிவ் கட்சியின் வெளிவிவகார கொள்கைகளை வடிவமைப்பதில் புலம்பெயர் தமிழ் சமூகம் எதிர்காலத்தில் காத்திரமான பங்குகளை வழங்க முடியும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகத் தமிழர் பேரவையின் நிகழ்வுக்கு பிரித்தானியாவின் எதிர்க்கட்சி தலைவரும், அதன் நிழல் வெளிவிவகார அமைச்சரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதும் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகின்றது.



0 Responses to பிரித்தானியாவின் கொன்சவேட்டிவ் கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் மக்களுக்கு சாதகமானது