பல்வேறு வயதினரும் பல்வேறு பின்னணிகளைக் கொண்டவருமாகஆயிரக்கணக்கான பெண்கள் ஹைட் பார்க்கில் ஒன்றகூடிப் பின்னர்ஒக்ஸ்வோட் வீதி ஊடாகவும் பிக்காடிலி வழியாகவும் ஊர்வலமாகச்சென்று ரவல்கா ஸ்கொயரில் ஒருங்கிணைந்தனர்.
ஐக்கியப்பட்டஅக்கூட்டத்திற்கு பல பேச்சாளர் அங்கு எழுச்சியூட்டும் உரையாற்றினர்.
உலகத் தமிழ்ப் பெண்கள் பேரவையின் (ஐ.இ) பிரதிநிதிஇ சிறீலங்காவில்தண்டனை பற்றிய அச்சமேதுமின்றி அரச படைகள் தமிழ்பபெண்களுக்கெதிராக நடத்திவரும் தொடர்சியான வன்முறைகளாலும்பாலியல் வன்முறைகளாலும் அப்பெண்கள்படும் உணர்வதிர்ச்சிப்பாதிப்புக்கள் பற்றி எடுத்துரைத்தார்.
“ஐக்கிய நாடுகள் சபையானது 100க்கு மேற்பட்ட சிறீலங்கா அமைதிப் படையினரை பாலியற் குற்றச்சாட்டிலும் பெண்களைத் தவறாக நடத்திய குற்றச்சாட்டிலும் ஹெயிற்றியிலிருந்து வெளியேற்றியுள்ளதெனில் அந்த இராணுவத்தின் கைகளில் தமிழ்ப் பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்”; என அவர்கூறினார்.
கொங்கோ, உகண்டா, இரான், அப்கானிஸ்தான ஆசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர் மேடையிலிருந்து ஒற்றுமைக்கும் பெண்களுக்கெதிரான உலகளாவிய வன்முறைக்கெதிராகவும் குரலெழுப்பினர்.
பெண்ணுரிமைக்காகச் செயலாற்றுவோர் மற்றும் பெண்களது தன்னார்வ அமைப்புகள் சமூக அமைப்புகள்முதலியவற்றின் பிரதிநிதிகளின் ஐக்கிய சங்கமாகிய மிலியன் வூமின் றைஸ் (Million Women rise) என்ற அமைப்பால் பெண்களின் செயல் முனைப்புஇ துணிவுஇ உலகளாவிய ஆண் வன்முறைக்கு எதிரான அயராப்போராட்டம் முதலியவற்றைப் போற்றிக் கொண்டாடும் பொருட்டு ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஊர்வலம்அனைத்துலகப் பெண்கள் தினத்துடன் ஒருமித்து நடைபெற்றது.
சிறீலங்காவின் தேயிலையை வாங்காது விலக்கும்படியும் அபபடியான பொருள்களை வாங்கும்செயற்பாடானது சிறீலங்காவில் அரச அனுசரணையுடன் நடைபெற்றுவரும் தமிழ்ப் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எவ்வளவிற்கு நிதி வழங்கும் என்பதையும் எண்ணிப் பார்க்கும்படியும் வருகைதந்திருந்தோரைப் பேரவை வேண்டிக்கொண்டது.



0 Responses to சிறீலங்காவில் தமிழ்ப் பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும்படி உலகத் தமிழ்ப்பெண்கள் பேரவை கோரிக்கை