எம்மை களணிக்கு வரக் கூடாது என தெரிவிக்க மேர்வின் சில்வாவுக்கு எந்த அதிகாரமும் கிடையா என ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முண்ணணியின் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.பொதுஜன ஐக்கிய முண்ணணியின் களனி தொகுதியின் அமைப்பாளரான அமைச்சர் மேர்வின் சில்வா, கடந்த ஞாயிறன்று களனியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில்; திடீரென நுழைந்து ஐதேகவின் களணி அமைப்பாளரான பெவன் பெரேராவை கட்டித்தழுவி வாழ்த்துத் தெரிவித்தது மட்டுமல்லாமல் களணிக்கு யானை வரலாம் ஆனால் அன்னம் வரக்கூடாது என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில் நாம் அன்னத்தில் போட்டியிடவில்லை கிண்ணத்தில்தான போட்டியிடுகின்றோம் எனவும் கூறினார்.



0 Responses to நாம் அன்னத்தில் போட்டியிடவில்லை! கிண்ணத்தில் போட்டியிடுகின்றோம்: அனுரகுமார திசாநாயக்க