Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்த ஆறு வருடங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நிர்மாணப் பணிகளுக்கான சகல வெளிநாட்டு ஒப்பந்தங்களும், சீனா மற்றும் இந்தியாவிற்கு வழங்கும் வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு ஆசோனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒப்பந்தங்களில் அதிகமானவற்றை சீனாவிற்கு வழங்குவது குறித்து கூடிய அக்கறைச் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனையின்படி லலித் வீரதுங்க நேற்று முதல் செயற்படும் வகையில் இரகசியமான தொழில்நுட்ப ஆய்வுக் குழுவொன்றை நியமித்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை காரணமாக நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அதிருப்தியடைந்துள்ளதாகவும் நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஸவின் ஆலோசனையின்படியே அதிகளவான நிர்மாணப் பணிகளை சீனாவிற்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது. சீன சட்டத்தின்படி நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் மற்றும் பொருட்கள் இறக்குமதியின்போது இடைத் தரகர்களாக பணியாற்றுபவர்களுக்கு லஞ்சம் வழங்குவது சட்டவிரோமல்ல என்பதால் பசில் ராஜபக்ஸ இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பாரிய ஒப்பந்தங்களை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்க தீர்மானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com