அமெரிக்காவின் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்ற சாட்டினை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என ரம்புக்வெல கூறியுள்ளார்.கடந்த புதன் அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சின் மனித உரிமை திணைக்களம் தனது மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கை அப்பட்டமான மனித உரிமை மீறல்களை போரின் இறுதி கட்டத்தில் செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது.
இந்த குற்ற சாட்டினை இலங்கை அரசாங்கம் சார்பில் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அமெரிக்கா இவ்வாறான கருத்தினை கடந்த நான்கு வருடங்களாக கூறிவருகின்றது. ஆனால் இது அவர்களின் வழமையான நடவடிக்கை. தமது நிறுவனங்கள் இயங்குகின்றது என காட்டுவதற்காக இவ்வாறான அறிக்கைகளை அடிக்கடி விட்டு கொள்வார்கள் ஆனால் நாம் அதனைப்பற்றி கவலைப்படவில்லை என கூறியுள்ளார்.



0 Responses to அமெரிக்காவின் குற்ற சாட்டை ஒரு பொருட்டாக இலங்கை மதிக்கவில்லை: ரம்புக்வெல