Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சரத் பொன்சேக்காவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடொன்றுக்குச் செல்லுமாறு பிரதம நீதியரசர் அசோக சில்வாவிற்கு அரசின் உயர் மட்டத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது.

உயர் நீதிமன்றம் குறித்து மக்கள் நம்பிக்கையற்றுப் போகதிருக்கும் வகையில் சரத் பொன்சேக்காவை பிணையில் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கக் கூடும் என்பதனாலேயே இவ்வாறு பிரதம நீதியரசருக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக தெரியவருகிறது.

பிரதம நீதியரசரைவிடவும் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படும் நிலை காணப்படுவதால் நீதியரசர் ஷிராணி தலைமையில் நீதியரசர் குழு பொன்சேக்காவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரச உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு பிரதம நீதியரசருக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணி குறித்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடாக நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்குக் காரணம் நீதியரசர் ஷிராணி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கொழும்பு சட்டபீடத்தில் கல்விகற்ற மாணவி என்பதனால் ஆகும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மனித உரிமைகள் வழக்குகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக இலங்கை அரசியல் சாசனத்தின் 126 ஆவது சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் -

அதனடிப்படையில் மனித உரிமை வழக்குகளில் நபர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக வழக்கு விசாரணைகளை இரண்டு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள போதிலும் ஷிராணி பண்டாரநாயக்க அரசியலமைப்பை மீறும் வகையில் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக வழக்கை ஒத்திவைத்துள்ளார் என்றும் -

அரசாங்கத்தின் உயர் மட்ட நபரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தே சரத் பொன்சேக்காவிற்கு பிணை வழங்குவது நிராகரிக்கப்பட்டதாகவும் அரச வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

0 Responses to பொன்சேகா விடுவிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பிரதம நீதியரசரை வெளிநாடு செல்லுமாறு அரசு அழுத்தம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com