Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஜனவரி 26 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ரோ எனப்படும் இந்திய வெளிதொடர்பு புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டதாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் தோல்வி அடைவதற்கு ஏதுவாக அவர்கள் செயற்பட்டதாக தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றம் சுமத்தியுள்ளார் ரோ எனப்படும், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் ஒப்புநோக்கு கண்காணிப்பகம், மற்றும், வெளித்தொடர்பு புலனாய்வு அமைப்பு என்பன ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலஙகைக்கு, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதியை சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் முன்னிலையில் நந்தன குணதிலக இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இந்திய அரசு மகிந்தவுக்கு ஆதரவு அழிப்பதாகவும் ரோ அமைப்பு மகிந்தவிற்கி எதிராக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

0 Responses to இந்திய "ரோ" அமைப்பு மகிந்தவிற்கு எதிராக செயற்பட்டதாம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com