Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் விடு தலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவ காரச் செயலாளர் நிருபமா ராவே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) சந்தித்தார்.

அச்சமயம் அவரையும் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு வெளியுறவுச் செயலர் அழைப்பு விடுத்தார் என்று, கிழக்கு மாகாண முதல்வரின் கட்சியான தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் அஸாத் மௌலானா குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுத் தேர்தலுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நிருபமாராவிடம் சமர்ப்பித்ததாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரிப்பதற்கும் அதன் கொள்கைகளை ஊக்குவிப்பதற்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என நிருபமா ராவ் குறிப்பிட்டார் எனவும் அஸாத் மௌலானா மேலும் தெரிவித்துள்ளார்.

"நிருபமாராவ் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக வாசித்தார். முதலமைச்சர் சந்திரகாந்தன் எமது கொள்கைகளைத் தெளிவு படுத்தினார். சாத்தியமான அனைத்து வழிகளிலும் இந்தியா உதவும் என உறுதியளித்த ராவ் தேர்தலுக்குப் பின்னர் புதுடில்லிக்குப் பேச்சுக்கு வருமாறு எமக்கு அழைப்பு விடுத்தார்'' என அஸாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்திய அதிகாரிகளுடனான பேச்சிற்காகப் புதுடில்லிக்குத் தாம் வருவார் என முதலமைச்சர் சந்திரகாந்தன் உறுதியளித்தார் எனவும் அஸாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

0 Responses to பிள்ளை (யானை) யும் இந்தியாவுக்கு வருமாறு நிருபமா ராவ் அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com