Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராணுவ நீதிமன்றில் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படுமானால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள், பதக்கங்கள் மற்றும் விருதுகளை அவர் இழக்க வேண்டி நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

அதாவது சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் இராணுவத்தால் அவமரியாதை வழங்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக கருத்திற்கொள்ளப்படும்.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள, ரண விக்ரம பதக்கம், ரணசூரபதக்கம், விசிஸ்ட்ட சேவா விபூஷணய என்பவற்றை அவர் இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.

அத்துடன் பாதுகாப்புக்கான ரோயல் கல்லூரி பட்டம் மற்றும் பிஎஸ்ரி ஆகிய பட்டங்களையும் அவர் பயன்படுத்த முடியாது போகும் என கூறப்படுகிறது.

சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நாளைய ஆரம்பமாகிறது. எனினும் இதற்கு சரத் பொன்சேகா செல்லமாட்டார் என ஜேவிபியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

சரத் பொன்சேகாவுக்கு பதிலாக அவரது வக்கீல் ஒருவர் நீதிமன்றில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜராகாமல் இருப்பது, விசாரணைகளுக்கு தடையாக அமையாது.

ராணுவ ஜெனரல் ஒருவர் சரத் பொன்சேகாவை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார், அப்போது சரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு வர மறுப்பு தெரிவித்தால், அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

எவ்வாறாயினும் சரத் பொன்சேகா தம் மீதான நீதிமன்ற விசாரணைகளை தெரிந்துகொள்ள வசதியாக, அவர் தங்கியுள்ள அறையில் ஒலி பெருக்கி ஒன்று வைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

0 Responses to பொன்சேகாவின் பதக்கங்கள் பறிக்கப்படுமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com