தமிழ் மக்களின் கலைபண்பாடுகளை பேணிப் பாதுகாக்கும் நோக்கிலும் காலையினை வளர்க்கும் நோக்கிலும் விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக்கழகம் உருப்பெற்றது. இதன் தொடக்க காலங்களில் ஈழவிடுதலைக்காக உழைத்த அதேவேளை, மக்களின் கலைபண்பாட்டை வளர்த்தெடுக்கவும் உழைத்தவர் சங்கர் அவர்கள் தொடக்க காலங்களில் தெருவெளி நாடககலைஞர்களை ஒன்றிணைத்து வீதிவிதியாக சென்று மக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலும் விடுதலை உணர்வினை வெளிக்கொணரும் செயற்பாட்டிற்காக கலைபண்பாட்டுக்கழகம் ஊடாக மக்களுடன் நின்று உழைத்தவர் லெப்.கேணல் சங்கர் அவர்கள்.
ஈழப்போராட்ட வரலாறுகளிலும் தமிழர்களின் பாரம்பரிய வரலாறுகளிலும் குறிப்பாக பண்டாரவன்னியனின் வரலாற்று நாடகத்தில் பண்டாரவன்னியனிற்கு நடித்து பல்துறைகலைஞராக செயற்பட்டார். சங்கர் அவர்கள் விடுதலையின் பணிக்காக தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருந்த அதேவேளை, மக்கள் மத்தியிலும் கலையின் ஆர்வத்தினை திறன்செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தவர்.
பின்பு விடுதலைப் புலிகளின் திரைப்பட உருவாக்கற்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட இவர், கலைபண்பாடு ரீதியாகவும் விடுதலைச் செயற்பாட்டு ரீதியாகவும் பல்வேறு குறும்படங்களை உருவாக்கம் செய்தார். இவ்வாறு விடுதலைப் புலிகளின் திரைப்பட உருவாக்கற் பகுதியில் நீண்டகாலம் உழைத்த இவர், தமிழீழத்தில் உருவான முழுநீளதிரைப்படமான எல்லாளன் படப்பிடிப்பு நடவடிக்கைகளிலும் படத்தின் ஒரு கதாபாத்திரத்தினையும் ஏற்று படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர்.
சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இறுதியில் களத்தில் களப்பணி ஆற்றிய இவர் 14.03.2009 அன்று சிறிலங்காப் படையினருடனான மோதலின் போது வீரச்சாவினை தழுவிக்கொண்டார்.



0 Responses to லெப்.கேணல் சங்கர் நினைவு வணக்கம் – எல்லாளன் படத்திலும் நடித்தவர்