Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்குடாநாட்டில் வடமராட்சி பகுதியில் ஜே.வி.பி அலுவலகம் ஒன்றை திறந்து வைத்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணம் வடமராட்சி, உடுப்பிட்டிப் பகுதியில் ஜனதா விமுக்தி பெரமுனை கட்சி அலுவலகம் ஒன்றை நேற்று (21) திறந்துள்ளது. ஜே.வி.பி தலைவர் சோமவன்சா அமரசிங்கா அதiனை திறந்து வைத்துள்ளார்.

27 வருடங்களின் பின்னர் ஜே.வி.பி யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தை திறந்துள்ளது. தமிழ் மக்களை சிறீலங்காவை ஆட்சிபுரிந்த பிரதான அரசியல் கட்சிகளான .தே. மற்றும் சுதந்திரக்கட்சி போன்றன படுகொலை செய்ததாகவும், ஆனால் ஜே.வி.பி ஒரு தமிழரை கூட கொல்லவில்லை எனவும் இந்த நிகழ்வில் பேசும் போது சோமவன்சா தெரிவித்திருந்தார்.

ஏனையவர்கள் கூறுவது போல ஜே.வி.பி இனவாதக் கட்சி அல்ல, றோகண விஜயவீரா ஜே.வி.பியை வழிநடத்தியபோது ஜே.வி.பியின் அலுவலகம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, சுண்ணாகம் ஆகிய பகுதிளில் இயங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் 40 பேர் கலந்துகொண்டிருந்தனர். அவர்களும் ஜே.வி.பியின் சார்பில் யாழில் போட்டியிடும் வேட்பாளர்களின் உறவினர்கள் என அவை மேலும் தெரிவித்துள்ளன.

0 Responses to யாழ். வடமராட்சியில் ஜே.வி.பி அலுவலகம் திறந்துள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com