வன்னி யுத்தத்தினை அனுபவித்த எனக்கு தாயகத்தின் அவசியம் நன்கு தெரியும் இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சி தொகுதி வேட்பாளர் வைத்திய கலாநிதி திருலோகமூர்த்தி அவர்கள் மாலுசந்தி, மைகேல் விளையாட்டு அரங்கில் நிகழ்ந்த யாழ் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து நிகழ்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை விளக்க கூட்டத்தினில் தெரிவித்தார்.மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேல்க்கொள்ள அகில இலங்கை காங்கிரசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மிகச்சிரமத்தின் மத்தியிலும் கிளிநொச்சி மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பெரும் ஆதரவை வழங்கி வருவது பெரும் ஆறுதலாக இருப்பதாகவும் அதேவேளை பல்வேறு தடைகளையும் மீறி யாழ் மக்களின் தேசியம் தொடர்பான எழிச்சி நம்பிக்கை தருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் மீளக்குடியேற்றம் விரைவில் சரியான முறையில் துரிதகதியில் இடம்பெறவேண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பெரும் ஆதரவை வழங்க வேண்டும் எனவும் வேண்டினார்.
இக்கொள்கை விளக்கக்கூட்டம் ஒய்வு பெற்ற ஆசிரியர் ச.விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இதன் பொது பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் செ.கஜேந்திரன் , பத்மினி சிதம்பரநாதன், முதன்மை வேட்பாளர் சின்னத்துரை வரதராஜா , கலாநிதி விஜயரட்னம் ஜோன் மனோகரன் கென்னடி, பிரான்சிஸ் வின்சன்டீ போல், நடேசு துரைராஜா, செல்லத்துரை சுப்ரமணியம் உட்பட யாழ்மாவட்ட வேட்பாளர்கள் கொள்கை விளக்கங்களை வழங்கினர்.



0 Responses to வன்னி யுத்தத்தினை அனுபவித்த எனக்கு தாயகத்தின் அவசியம் நன்கு தெரியும்: கலாநிதி திருலோகமூர்த்தி