Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரப் பயணமாக நேற்று மாலை வவுனியா நகரசபைக் கலாச்சார மண்டபத்திற்கு சென்றிருந்தார்.

பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய மக்கள் இன்மையினால் கூட்டம் 4:30 மணிக்கே ஆரம்பமாகியது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தனாயக்கவும் உடன் சென்றிருந்தார்.

கூட்டம் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படவில்லை என்று கட்சியினரிடையே வாய்த்தகாரறும் ஏற்பட்டது. மண்டபத்தில் 80 வீதமான இருக்கைகள் காலியாக இருந்தன. சுமார் 200 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

வவுனியா தேர்தல் கூட்டம் ரணிலுற்கு பெரும் ஏமாற்றத்தினையே அளித்துள்ளது என்று பேசப்படுகிறது.

0 Responses to வவுனியா தேர்தல் கூட்டம் ரணிலுக்கு ஏமாற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com