சிறீலங்கா அரசினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்களை படைத்தரப்பு முன்வைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவர் சில தினங்களில் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் எனவும் இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இராணுவ விதிகளின் அடிப்படையில் பொன்சேகா மீது ஐந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது இந்த வார இறுதியில் இராணுவத் தளபதியிடம் கையழிக்கப்படும்.
அவர் மீதான குற்றச்சாட்டுக்களை படைத்துறை நீதியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இராணுவத்தளபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், அவர் இராணுவ நீதிமன்றத்தை சில நாட்களுக்குள் அமைப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
22 இராணுவத்தினர், 7 காவல்துறை அதிகாரிகள், 6 பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து 22 நாட்களாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொன்சேகா மீதான குற்ச்சாட்டுக்களை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரட்ணாயக்கா தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



0 Responses to பொன்சேகாவும் ஐந்து குற்றச்சாட்டுகளும்: நீதிமன்றத்தில் ஆயர் படுத்த தயாராகும் அரசாங்கமும்