Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னி மண்ணிலிருந்து வெள்ளையரை எதிர்கொண்ட மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் இலங்கைப் படையினரால் சிதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1803-08-31 ம் ஆண்டு, தற்போதைய முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் பகுதியில், பண்டாரவன்னியனுக்கும், ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக் என்பவனுக்கும் பெருஞ்சமர் நிகழ்ந்ததாகவும், இந்த மோதலில் பண்டாரவன்னியன் கொல்லப்பட்டதாகவும், குறிப்பிட்ட நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்து.

கடந்த பல வருடங்களாக அந்த நினைவுச் சின்னம் இருந்த இடம், வன்னி மக்களால், புனிதமான பகுதியாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந் நினைவுச் சின்னம், பண்டாரவன்னியனின் சிறப்பையும், நினைவையும் வெளிப்படுத்தியதோடு, தமிழர்களின் முக்கிய வரலாற்றுச் சாசனமாகவும் அமைந்திருந்தது.

வெளி உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய ஆதாரபூர்வமான ஒரே ஒரு நினைவுக்கல்லாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நினைவுச் சின்னம் இருந்தமையாலேயே அந்தப்பகுதி கற்சிலை மடு எனப் பெயர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to பண்டார வன்னியன் நினைவு சின்னம் படைகளால் சிதைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com