மன்னாரில் வேலையற்றோருக்கு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்டாயமாக அங்கத்தவர்களை கட்சிக்குச் சேர்க்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுவருகின்றது. வடமாகாண ஆளுநர் ஜீ.எ.சந்திரசிறீயும், மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீனும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.வேலையற்ற பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்கள், தாதியத் தொண்டர்கள், உயர்தரம் நிறைவு செய்து வேலையற்றிருப்போர் என எண்ணூற்கும் மேற்பட்டடோரை மன்னாரில் சந்தித்த சந்திரசிறீ, றிசாட் பதியுதீன் ஆகியோர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். இதன் போது ஒவ்வொருவருவருக்கும் தலா நூறு விண்ணப்பப்படிவங்களை கையளித்து ஒவ்வொருவரும் நூறு நூறு அங்கத்தவர்களை இணைத்து அவர்களின் விபரங்களை விண்ணப்பப்படிவங்களில் பூர்த்தி செய்து வழங்கவேண்டும்; அவ்வாறு பூர்த்தி செய்து வழங்குவதுடன் குறிப்பிட்ட அனைவரைச் சார்ந்தோரையும் வெற்றைச் சின்னத்திற்கு வாக்களிக்க வைக்கவேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தேர்தலை அடுத்து அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்து எண்ணூறு பேரது பெயர் விபரங்களும் பதிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தினை அடுத்து கல்விகற்றும் நியமனங்கள் இன்றி பல ஆண்டுகளாக கஸ்ரப்படும் குறிப்பிட்டவர்கள் சிறீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பிற்கு அங்கத்தவர்களை இணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 Responses to மன்னாரில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி மகிந்த கட்சிக்கு ஆட்சேர்ப்பு!