சிறீலங்கா விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழுவை நியமிக்கும் விஷயத்தில், ஐ.நா. சபை செயலாளர் பான் கீ மூன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த தகவலை தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர், இந்த நிபுணர்கள் குழுவை நியமிப்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அதே சமயம் இந்த நிபுணர் குழு மிக விரைவில் அமைக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த குழு அமைப்பு தொடர்பாக பான் கீ மூன், அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தார்.
அப்போது, இந்த குழு அவசியமில்லை என்ற கருத்தை ராஜபக்சே வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



0 Responses to சிறீலங்கா தொடர்பான நிபுணர்கள் குழு: பான் கீ மூன் ஆலோசனை