கடந்த ஆண்டு போர் முடிந்த கையோடு இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கூறிய வாக்குறுதிகளை மட்டும் ஏற்றுக்கொண்டு எதுவும் பேசாமல் திரும்பியிருந்தது தெரிந்ததே. இப்போது அந்த வாக்குறுதிகள் கொடுத்து ஒரு ஆண்டு ஆகும் நிலையில், தமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முன்னேற்றம் ஏதுமில்லை என பான் கி மூன் விசனம் தெரிவித்துள்ளார்.இந்த பிரச்சனை குறித்து தாம் ஜனாதிபதி மஹிந்தவுடன் பேசியுள்ளதாகவும், தாம் அமைக்கவுள்ள வல்லுநர் குழுவானது இவ்விடயங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்கவுள்ளதை மஹிந்தவுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுத்திட்டம், இடம்பெயர்ந்த மக்களின் நிலமை குறித்த நடவடிக்கை ஆகியவை உள்ளடங்கலாக தாம் இருவரும் முன்னர் பேசிய விடயங்கள் குறித்து கடந்த வியாழக்கிழமை மஹிந்தவுடன் பேசியபோதும் உறுதியான கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் பான் கி மூன் தெரிவித்தார்.
எனவே இந்நோக்கத்துக்காக அரசியல் விவகாரங்களின் துணைச் செயலாளர் லின் பாஸ்கோவை கூடிய விரைவில் அனுப்ப உள்ளதையும் மஹிந்தவிடம் தெரிவித்துள்ளதாக அவர் நியூயோர்க் பத்திரிகையாளருக்கு கூறியுள்ளார்.



0 Responses to மகிந்த தந்த வாக்குறுதியின் முன்னேற்றமில்லை: பான் கி மூன்