போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் இன்று அமைச்சர்களாக இருக்கின்றனர்.ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்க ணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்கள் இன்று சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பிலேயே ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் ஏற்பாடு செய்த இந்த ஊடகவியலாளர் சந்திப் பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், மாகாண அமைச்சரு மான ஹிஸ்புல்லா, இன்று சிறையிலிருக்கின்ற ஆயிரக் கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர் களை விடுவிப்பதற்கு எதிர்வரும் அரசாங்கத்தில் நான் நடவடிக்கை எடுப்பேன்.
இதற்கான பரிந்துரையை நான் ஜனாதிபதியி டத்திலும் அரசாங்கத்திடமும் முன்வைத்து இத் தமிழ் இளைஞர்களை விடுவித்து அவர்களின் குடும்ப உறவுகளுடன் சேர்த்து வைக்க நான் பாடுபடுவேன்.
கடந்த பல தேர்தல்கள் ஆயுதக் கலாசாரத்திற்கு மத்தியில் நடைபெற்றன. தமிழ் மக்கள் சுதந்திரமாக சிந்தித்து வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கும் சுதந்திரமாக செயற்ப டுவதற்கும் சந்தர்ப்பம் இருக்கலாம். ஆனால் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் சுதந் திரமானதும் அச்சமற்ற காலத்திலும் நடைபெறுகின்றது. தற்போது நமக்கு ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதியையும் சமாதானத்தையும் நிரந்தரமான அமைதியானதும் நிரந்தர சுதந்திரமானதாகவும் நாம் மாற்ற வேண்டும்.
அச்சமற்ற நிலையும்,சுதந்திரமான சூழ்நிலையும் தொடர்ந்து இருக்க வேண்டும். இனிவரும் ஏழாண்டுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் இந்த நாட்டை ஆட்சி செய்யப் போகின்றார். ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி இந்த அரசாங் கத்தில் யுத்தத்தினால் மிகவும் மோசமாக அழிந்து போயுள்ள கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக இனவாதமற்ற திறமை யான ஒருவரை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கக் கட்சியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரம், நீர்ப் பாசனம், வீதி அபிவிருத்தி என்பவற்றை மேற் கொள்வதுடன் சிறந்த பொருளாதார நிலையை யும் மேம்படுத்தவேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்காக நீங்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.



0 Responses to சிறையிலிருக்கும் அப்பாவி இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: ஹிஸ்புல்லா