Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவரது வல்வெட்டித்துறையில் உள்ள வீட்டினை பார்ப்பதற்காக அதிகளவான சிங்கள உல்லாசப்பயணிகள் செல்வதாக வடபகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டினைச் சுற்றிவர இராணுவத்தினர் 24 மணிநேரமும் பாதுகாப்புக்கடமையில் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாகவும், அதிகளவான சிங்கள மக்கள் ஆர்வத்துடன் வீட்டினைச் சென்று பார்வையிடுவதாகவும் தெரியவருகின்றது.

சிலர் வீட்டின் சுவர்களில் சில குறிப்புக்களை எழுதியது மட்டுமல்லாமல், வீட்டுச் சுவரினை உடைத்து கற்துண்டுகளை எடுத்துச் சென்ற நிலையில் தமிழ் இளைஞர்கள் முறைப்பாட்டினை மேற்கொண்டு, இராணுப்பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

0 Responses to தேசியத் தலைவரது வீட்டினை பார்க்க அதிகளவான சிங்களவர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com