Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிடம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க உள்துறைத் திணைக்களம் என்பன விசாரணை நடத்தத் தயாராகி வருவதாக ராஜதந்திரத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் தனது அமெரிக்கக் குடியுரிமையைப் புதுப்பிக்கச் சென்ற பாதுகாப்புச் செயலாளரிடம் அமெரிக்க உள்துறைத் திணைக்களம் விசாரணை நடத்திய போதிலும் அவர் அதனைப் பகிரங்கப்படுத்தவில்லை.

பின்னர், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்க உள்துறைத் திணைக்களம் விசாரணைகளை நடத்த அதன் அதிகாரிகள் அழைப்பு விடுத்தபோது அவர் விசாரணைகளுக்கு முகம் கொடுக்காமல் இலங்கை திரும்பியதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதன் பின்னர் இலங்கையின் இராணுவத் தலைவர் ஒருவர் அமெரிக்காவுக்கு இம் முறையே விஜயம் செய்கின்றார். இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியவின் மூன்று சகோதரர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் ஹியுஸ்டன், பில் டெல்பியா மற்றும் சிக்காகோ நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். சிக்காகோ நகரில் வசிக்கும் சகோதரரின் பிள்ளை ஒருவரின் திருமணம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே இராணுவத் தளபதி அமெரிக்கா செல்லவுள்ளார்.

0 Responses to இலங்கை இராணுவத் தளபதியிடம் அமெரிக்கா விசாரணை நடத்தும்! - ராஜதந்திர தரப்புகள் தகவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com