தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியுற்றாலும், தனது நோக்கத்தில் வெற்றி பெற்றிருப்பதாக, யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.வரதராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது...
வணக்கம்,
இத் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு தாங்கள் வழங்கிய பெரும் ஆதரவிற்குமிகவும் நன்றி. இத் தேர்தலில் நாம் தோல்வியடைந்த போதிலும்போட்டியிட்டதற்கான நோக்கத்தில் நாம் வெற்றியடைந் துள்ளோம். கூட்டமைப்புதூக்கியெறிய நினைத்த தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை மீண்டும் அவர்கள் தூக்கிப் பிடிப்பதற்கு நாம் துணைநின்றிருக்கின்றோம் என்பதில் நாம் பெருமை அடைகின்றோம்.
இத் தேர்தலில் நாம் எந்தவொரு ஆசனத்தையும் பெறாவிட்டாலும் கூட்டமைப்புதவறான பாதையில் செல்லும்போது நிலத்திலும் புலத்திலும் உள்ள எம் மக்களின்துணையோடு அவர்களை சரியான பாதையில் நடக்கச் செய்வதில் நாம் உறுதியாகஇருக்கின்றோம்.
வில்லின் நாண் பின்னோக்கிச் செல்வது அம்பை முன்னோக்கிச் செலுத்துவதற்கே.எனவே இத் தேர்தல் எமக்குப் பின்னடைவல்ல. நாம் முன்னோக்கிப் பாய்வதற்கானஒரு பயிற்சிக் களமே இத் தேர்தலாகும். நாம் வெற்றியைத் தலைக்குள்ஏற்றமாட்டோம். தோல்வியை மனதிற்குள் புகவிடமாட்டோம்.
நான் இத் தேர்தலில் போட்டியிடும்போது உங்களைப் போன்றவர்களின் இவ்வாறானபெரும் ஆதரவு எனக்குக் கிடைக்கும் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் வேலைகளில் நான் சற்று சோர்வடை யும்போது உங்களது ஆதரவான - ஆறுதலானவார்த்தைகள் - எழுத்துக்கள் பெரிதும் உற்சாகத்தைத் தந்தன. உங்களுக்கு ஒருவெற்றிச் செய்தியை வழங்கமுடியாமல் போய்விட்டதே என்பது மட்டும்தான் எனதுகவலை.
எதிர்காலத்தில் நிலத்தில் வாழும் எம் மக்களின் அரசியல்; மற்றும்பொருளாதார உரிமைகளுக்கான திட்டங்களை மேற்கொள்வதில் தங்களின்ஆலோசனைகளையும் உதவிகளையும் நாடி நிற்கின்றேன். எழுவோம் தேசியத்திற்காக அயராது உழைப்போம்.
நன்றி
இப்படிக்கு
சி.வரதராஜன.



எது 718 வாக்குகள் கிடைத்ததற்காகவா இவ்வளவு நன்றியும். சயிக்கிள் காரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்புக்குப் போயிட்டாராம். பத்மினி லண்டன் போய் மினிக்கிப்போட்டு, அடுத்த தேர்தலுக்குத்தான் தலைகாட்டுவா. வரதராசன் அண்ணைய இன்னும் 5 வருடத்தில சனங்கள் மறந்து போயிடும். அதையும் விட இன்னொரு செய்தி கஜேந்திரன் கூட்டமைப்பில சேரப் போகிறாராம். அண்ணர் யாழ்ப்பாணத்தில தனியத்தான் சயிக்கிள் ஓட்ட வேண்டும்.