யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.62 வயதுடைய றீற்றா மொர்லிங் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் ஒருவரைத் திருமணம் செய்துள்ள இந்தப் பெண் பத்து நாட்களுக்கு முன்பே யாழ்ப்பாணம் வந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
யாழ் பிரதான வீதியில் அமைந்திருக்கும் திருமறை கலாமன்றக் கட்டடப் பகுதியின் பின்புறமாகவே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மின்சார இணைப்பிற்குப் பயன்படுத்தப்படும் வயர் மூலம் இவரது சடலம் தொங்கவிடப்பட்டிருந்தது.
இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்ட பின்னர் இவ்வாறு தொங்க விடப்பட்டாரா என்பது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகிறது.



0 Responses to யாழ்ப்பாணத்தில் சுவிஸ் பெண்ணின் சடலம் மீட்பு