
பொலிஸிற்கு விண்ணப்பித்த 6 ஆயிரம் பேரில் நேர்முகப் பரீட்சை ஊடாக 500 பேர் தெரிவாகியிருந்தனர். இவர்களில் முதற் கட்டமாக 300 பேர் தெரிவு செய்யப்பட்டு, இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அவர்கள் வசிக்கும் பொலிஸ் நிலையப் பொறுப்திகாரி மூலம் வழங்கப்பட்டுள்ளன.
நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் முதலாம் திகதி களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிக்காக செல்லவேண்டும்.
பொலிஸிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவரும் பயிற் சியின் பின் யாழ்.மாவட்டத்தில் பணியாற்ற நியமனம் வழங்கப்பட வுள்ளது என்றும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
0 Responses to சிறிலங்கா பொலிஸிற்கு யாழ்ப்பாணத்திலிருந்து 300 பேர் தெரிவு