
இன்று காலை தேசிய ஊடகக் கழகத்திற்கு சமூகமளித்த சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர், அங்கு அவருக்காக செய்தியாளர்கள் காத்திருந்த வேளையில் எவ்வித காரணங்களையும் கூறாது மாநாட்டு மண்டபத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
இதனிடையே, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தேசிய ஊடகக் கழகத்தின் மூத்த பிரதிநிதிகளுடன் இறுதி நேரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே செய்தியாளர் மாநாட்டை ஜீ.எல்.பீரிஸ் புறக்கணித்திருப்பதாக வோஷிங்டன் ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Responses to அமெரிக்காவில் செய்தியாளர் மாநாட்டிலிருந்து ஜீ.எல்.பீரிஸ் வெளிநடப்பு!!!