Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் மக்களிற்கு களிப்பூட்ட தாம் தமிழ் திரைப்பட விழா ஒன்றினை ஏற்பாடு செய்து வருவதாக சிங்கள படைத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இந்த விழாவினை ஒரு வாரத்துக்கான திரைப்பட விழாவை நடத்த தாம் ஏற்பாடு செய்துள்ளதாக படைத்தளபதி கூறியுள்ளார்.

இத்திரைப்பட விழாவில் தென்னிந்திய பழைய தமிழ் திரைப்படங்களும் வெற்றிப் படங்களும் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் பணிப்பின் பேரில் இதற்கான நடவடிக்கைகளை, அங்குள்ள பாதுகாப்புத் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றதாம்.

தமிழர்களின் அரசியல் பிரச்சனைகளை திசை திருப்புவதும், சிந்திக்கக்கூடிய மக்களை கொலை செய்து கிணறுகளில் போட்டு மர்ம மரணங்களை ஏற்படுத்துவதும் நடைபெற்றுவரும் இவ்வேளைகளில், இப்படியான திரைப்பட விழாக்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளை வைப்பதன் ஊடாக இளைய சமுதாயத்தை சீரழித்து சிதைத்து இனத்தை அழிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா முனைப்பு காட்டுவதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Responses to யாழில் சிங்கள படையினரின் ஏற்பாட்டில் தமிழ் திரைப்பட விழாவாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com