Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதாவுக்கு நாம் தமிழர் இயக்கம் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்பு காட்டிய நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதா விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினர். அப்போது கருப்புக் கொடி காட்டியவர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் தஞ்சை, திருவாரூர் வழியாக கார் மூலம் வேளாங்கண்ணி வந்த இலங்கை அமைச்சருக்கு, வேளாங்கண்ணி ஆர்ச் என்ற இடத்தில் நாம் தமிழர் இயக்கத்தினர் கருப்புக் கொடி காட்டினர். அப்போது கருப்புக் கொடி காட்டியவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்துடன் வேளாங்கண்ணியில் இலங்கை அமைச்சர் தரிசனம் செய்தார்.

0 Responses to தமிழகம் வந்த இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com