Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடுகடந்த தமிழீழ அரசின் முதல் அமர்வின் இரண்டாம் நாள் அமர்வு இன்று பிலடெல்பியா மாநகரில் ஆரம்பமானது. இந்த வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த அமர்வில் நேற்றுப் போல் இன்றும் பல நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த உறுப்பினர்கள் மிகவும் உற்சாகத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

போர்க்குற்றவியல் நாளாக உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு இன்று (18-05-2010) அனைத்து நாடுகளிலும் அதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளையும், கண்காட்சிகளையும், பொதுக்கூட்டங்களையும் நடாத்திவரும் வேளையில் தமிழர்களுக்கான அரசவையாக வரலாற்றில் நாடுகடந்து நடாத்தப்படும் இந்த நாடுகடந்த தமிழீழ அரசின் முதல் அமர்விலும் அதற்கான அகவணக்கத்துடன் அரசவை ஆரம்பிக்கப்பட்டு நினைவு உரைகளும் நடாத்தப்பட்டது.

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இன்று காலை 09:30 மணியளவில் ஆரம்பமான இயரண்டாம் நாள் அமர்வில் பல முக்கிய விடையங்கள் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

இங்கு எடுக்கப்படும் முடிவுகளே உலகத் தமிழர்களால் மிகவும் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் பார்க்கப்படும் இந்த நாடுகடந்த தமிழீழ அரசின் எதிர்கால நகர்வுகள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை வெளிக்கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நாடுகடந்த தமிழீழ அரசவையின் இரண்டாம் நாள் அமர்வு ஆரம்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com