சிறீலங்கா அரசுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை இற்றைவரைக்கும் ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தவில்லை என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு சிறீலங்கா அரசுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்துவதாக கடந்த சனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த பொழுதும், அதற்கான நடவடிக்கை எதனையும் இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவில்லை என்று தெரிய வருகின்றது.
மாறாக, வரும் யூலை மாத நடுப்பகுதி வரை சிறீலங்கா அரசுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்திருப்பதோடு, குறிப்பிட்ட கால எல்லைக்குள் மனித உரிமை மீறல் சர்ச்சைகளுக்கு சுமுகமான தீர்வு காணப்படும் பட்சத்தில், ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கான சமிக்ஞைகளை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருப்பதாகவும் இராசதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதனிடையே, விரைவில் தமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட இருக்கும் முந்நூறு கோடி டொலர் பெறுமதியான போருக்குப் பின்னரான மூன்றாண்டு கால அபிவிருத்தித் திட்டத்தில் பங்காளியாக இணைந்து கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தாங்கள் அழைப்பு விடுத்திருப்பதாக, சிறீலங்கா வெளியுறவுத்துறை செயலர் ரொமேஷ் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போர்க்கால கெடுபிடிகளைத் தளர்த்தி மீள்குடியேற்றப் பணிகளை மேற்கொண்டமைக்காக தமது அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியிருப்பதாக, சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் காமினி லக்ஷ்மன் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சிங்கள அரசுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தவில்லை!