Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி 17 நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு உண்ணாநிலையுடன் தனது நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களில் சிவந்தனின் தந்தையும் அடங்குவதால், தனது தந்தையையும் கொல்லப்பட்ட அத்தனை தந்தைமாரையும் நினைத்து இன்று தான் உண்ணாநிலையை மேற்கொள்வதாக சிவந்தன் கூறினார்.

நேற்று 70 இற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து நடக்க 11 மணித்தியாலங்களில் 40 கிலோமீற்றர் நடந்திருந்த சிவந்தன், இன்று 8 பேர் இணைந்து நடக்க தனது நடை பயணத்தைத் தொடருகின்றார். மேலும் சில பொதுமக்கள் இன்றும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைந்துகொள்ள இருக்கின்றனர்.

நேற்றைய 40 கிலோமீற்றர் தூர நடை பயணத்தில் சிவந்தனுடன் 14 வயதுச் சிறுமி ஒருவர் 40 கிலோமீற்றர் தூரமும் நடந்து சென்றிருந்த அதேவேளை, சிவந்தனுக்கு துணையாகச் செல்லும் இலக்கியன், பொஸ்கோ, ஹரி, வினோத், தினேஸ், ராஜ் போன்றவர்களும் அவ்வப்பொழுது இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறும் எனவும், இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.




மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to எதிர்வரும் 20ஆம் தேதி ஐ.நா முன்றலில் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com