Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடந்தநடை தளராத நல்லோன் நெஞ்சம்
கிடந்தமனக் கொள்கை யினைப் போற்றி நாமும்
தடந்தோள்கொள் மண்ணு றங்கும் மைந்தர் காதில்
தொடர்ந்தான் என்றொரு வார்த்தை சொல்வோம்இன்றே!

பட்டஇடம் பொன்னாகும் பதித்த காலோ
சுட்டுமணல் தகித்தாலும் சொல்லாத் துன்பம்
இட்டுஉயிர் வேதனையில் இழைந்த போதும்
விட்டுவிட வில்லைஇவ் வீரத் தமிழன்

எடுத்தமனக் கொள்கையே எங்கள் தமிழர்
இடுகண்களைந் தேயவரை இன்னல் காத்து
தொடுவேலி தடைநீக்கி சுகமே வாழக்
கடுநடந்து உலகசபைக் கதவைத். தட்டி

ஒருவாழ்வு எமக்களிப்பீர் உலகோர் நீதி
தரும் செயலில் தளராதீர் தருவீர் என்னும்
பெருமுயற்சி கைகூடிப் பிறந்தே விடிவும்
திரும்பிடவே சுகவாழ்வு தோன்றத்தானே!

வாழ்த்துவோம் சிவந்தனின் வளரும் பயணம்
வளமாக சுகமாக நிறைவே காணப்
போற்றுவோம் இவன் கொண்டமனத்திடமும்
பொறுக்காத துயர்கண்டு கொதிக்கும் நெஞ்சம்

வீழ்த்திடுவோம் எதிரியவன் வஞ்சம் சூழ்ச்சி
வெறும் பொய்யில் வீடுகட்டி வாழுமவரின்
காழ்ப்புணர்வு கடும்போக்கு இனத்தைக்கொன்று
காணிநிலம் பறித்தெடுக்கும் கயமையாவும்

கேட்டிடுவோம் நீதி நமக்கெங்கே யென்று
கிளம்பியவன் சிவந்தனவன் வழியில் நின்று
பூட்டிவைத்த கதவில் கை கொண்டேதட்டி
போதுமினி வாருங்கள் வெளியே என்போம்

*****************************************

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிவந்தன் வெற்றி பெற வாழ்த்துவோம்: கவிதை வடிவம் கிரிஷாசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com