Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 10வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார். இவரது பயணத்துடன் அதிகளவிலான மக்கள் தொடர்ச்சியாக இணைந்து வருகின்றனர்.

இன்று காலை முதல் 10ற்கும் மேற்பட்டவர்கள் சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்லுகின்றனர். நேற்று 30 பேர் வரையில் இணைந்து நடந்த அதேவேளை, சிவந்தன் 50 கிலோமீற்றர்களைக் கடந்திருந்தார். அவர் நேற்று அதிக தூரங்கள் கடந்திருந்தார்.

தற்போது செவ்றன் நோக்கி நடந்துகொண்டிருக்கும் அவர் இன்னமும் 21 கிலோமீற்றரில் மாலை 3.30மணிக்கு செவ்றன் வந்தடைவார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செவ்றனில் அமைக்கப்பட்டுள்ள சிறீலங்காவினால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் நினைவு கல் அமைந்துள்ள இடத்தில் அவர் அஞ்சலி செலுத்திய பின்னர் மீண்டும் தனது நடை பயணத்தை தொடர்வார். செவ்றனில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் அந்நகரபிதாவும் கலந்து கொள்ளவுள்ளார்.

எனவே, செவ்றோனுக்கு வரும் சிவந்தனுக்கு, அவரது மனிதநேய நடை பயணத்துக்கு, மக்கள் திரண்டு தமது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,

கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்,

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்,

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிவந்தன் 3.30 மணிக்கு செவ்றன் வந்தடைவார்: ஆதரவு கொடுக்க மக்களுக்கு அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com