Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் பாரிசைத் தலைமையகமாகக்கொண்டுள்ள பட்டினிக்கு எதிரான அமைப்பு Action Contre La Faim (ACF) என்ற மனிதாபிமான அமைப்பின் 17 உள்ளுர் பணியாளர்கள் மூதூரில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் மரண தண்டனைவிதிக்கப்படும் பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மூதூர் பகுதியில் சிறிலங்கா தரை ப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சூழ்நிலையிலேயே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன .2004 ஆம் ஆண்டில் இடம்பெற்றஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் இந்த மனிதாபிமான அமைப்பின் பணியாளர்கள்ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மூதூரில் போர் மூண்டதையடுத்து அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையிலேயே 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இதன் உள்ளூர்ப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட னர் . இதில் 16 பேர் தமிழர்கள். ஒருவர் முஸ்லிம்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மூதூர் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று (04-08-2006)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com