Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் 2009 மே கடற்கரை இரத்தக்களரியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக வெறுமனே ஆலோசனை வழங்குவதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை நியமிப்பதற்கு .நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஒருவருடம் எடுத்தது என்று நியூயோர்க்கில் .நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றிப் பிரஸ் நேற்று சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக இன்னர்சிற்றிப் பிரஸின் நிருபர் மத்தியூ ரசல்லீ தெரிவித்திருப்பதாவது:

காஸாவுக்குச் சென்ற கப்பல் தொகுதி மீது தாக்குதல் இடம்பெற்ற இரண்டு மாதங்களின் பின்னர் ஆகஸ்ட் 2 இல் அது தொடர்பான விசாரணையை பான் கீ மூன் ஆரம்பித்துள்ளார். இதற்கென நான்கு உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காஸா தாக்குதல் சம்பவத்தில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் 10 இல் இந்த விசாரணைக் குழுவின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுமெனவும் முதலாவது அறிக்கை செப்டெம்பர் நடுப்பகுதியில் அதாவது .நா. பொதுச்சபையின் வருடாந்த விவாதத்தின் முன்னர் அந்த அறிக்கை வெளியிடப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையிலான முரண்பாடான தன்மை குறித்து பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நீர்சேக்கியிடம் இன்னர்சிற்றிப் பிரஸ் ஆகஸ்ட் 2 இல் (திங்கட்கிழமை) கேள்வி எழுப்பியது.

இந்த இரு குழுக்களை அமைப்பதில் பான் கீ மூன் காட்டிய வேகத்தில் காட்டிய வித்தியாசம் இலங்கைக் குழு தொடர்பாக வித்தியாசமான குறுகிய பரிமாணம் என்பன குறித்து இன்னர்சிற்றிப் பிரஸ் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியது.

இன்னர்சிற்றிபிரஸ்: ஒப்பீட்டு ரீதியான குழுக்களை நாங்கள் பெற்றுக் கொள்ளப் போகிறோமோ என்பது குறித்து எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் பூட்டோ தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து குழுக்களை ஒப்பிட்டுப் பார்த்து சிலர் ஆச்சரியப்பட்டுள்ளனர். இதனை இலங்கை குழு தொடர்பாக ஒப்பிடுகின்றனர்.

பேச்சாளர் நீர்சேர்கி: நீங்கள் அந்த விடயத்திற்கு செல்லவேண்டுமென நான் ஏன் நினைத்திருக்க வேண்டும்?

இன்னர் சிற்றி பிரஸ்: ஆம்ஆம்பின்னரும் இலங்கை தொடர்பான குழு பணியை ஆரம்பிக்கவில்லை என்பதே கேள்வியாகும். குழுவிற்கு அதிகாரிகளை நியமிக்கும் விடயத்தால் இன்னரும் பணி ஆரம்பிக்கப்படவில்லை என நான் ஊகிக்கின்றேன். அவ்வாறு எனக்கு கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் வேகம் தொடர்பான வித்தியாசம் குறித்து நீங்கள் எவ்விதம் விபரிக்க முடியும் என்பதையிட்டு நான் ஆச்சரியப்படுகிறேன். சகல விடயங்களிலும் வேகம் காட்டப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இலங்கை தொடர்பான குழுவை அமைக்க ஒருவருடம் எடுத்ததாக அவர்கள் கூறுகின்றனர். இன்னரும் அக் குழுவின் பணி ஆரம்பிக்கப்படவில்லை. அக்குழுவின் நிலைமை என்ன? எப்போது அக் குழு தனது பணியை ஆரம்பிக்கும்? எப்பொழுது அக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்?

பேச்சாளர் நீர்சேர்கி: அந்தக் குழுவின் அலுவலர்கள் தொடர்பான விடயங்கள் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். என்னிடம் அத்தகைய விபரம் இல்லை. முதலாவது விடயமாக இருப்பது அவர்கள் (இலங்கை தொடர்பான குழு) ஏற்கனவே சந்தித்துள்ளனர். எவ்வாறு பணியாற்றுவது என்பது தொடர்பாக அவர்கள் ஆராய்கின்றனர். அவர்களுக்குத் தலைமை அதிகாரி ஒருவர் உள்ளார்.

நிபுணர் குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களுடன் அந்த நபர் ஏற்கனவே பணியாற்றி வருகிறார். இது முதலாவது விடயமாகும். இரண்டாவது விடயமாக இருப்பது, விசாரணையை நீங்கள் எங்கே ஏற்படுத்திக் கொள்வதென்பதாகும். நிபுணர்கள் குழுவானது மிகவும் கவனமான முறையிலும் இராஜதந்திர ரீதியிலம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு நீண்ட காலம் எடுக்கும். சில விடயங்களுக்கு குறுகிய காலம் எடுக்கலாம். ஒன்றுடன் ஒன்றை நீங்கள் ஒப்பிட முடியாது. இராஜதந்திரம் எவ்வாறு செயற்படுகிறதே என்பதே இந்த விடயமாகும்.

போதியளவிற்கு உரத்த குரலில் நாடொன்று முறைப்பாடு செய்யுமானால் .நா. அலுவலர்களை அவர்களுடைய கட்டிடத்திற்குள்ளேயே தடுத்து வைத்திருப்பதற்கான நிலை ஏற்படுமானால் பான் கீ மூனின் .நா.வானது மிக மெதுவாகவே முன்நகர்வை மேற்கொள்ளும்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக எச்சரிக்கையுடனும் தாமதமாகவும் முன்நகர்வை மேற்கொள்ளும். சூடான், மியான்மார் போன்ற நாடுகளுக்கு .நா. விடுக்கும் செய்தி என்ன? சூடான் ஏற்கனவே பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளதாக தோன்றுகிறது.

டார்பரில் .நா. பணியாளர்கள் வீதிகளில் பயணம் செய்வதற்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென சூடான் அறிவித்துள்ளது. அத்துடன் விமான நிலையத்தில் அவர்களுடைய பைகள் சோதனைக்குள்ளாக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குழு தொடர்பான காலவரையறை குறித்து இன்னரும் தெளிவற்ற நிலை காணப்படுகிறது என்று இன்னர்சிற்றிப் பிரஸ் கூறியுள்ளது. இது தொடர்பாக இன்னர்சிற்றிப் பிரஸ் கேள்வி எழுப்பியது.

இன்னர்சிற்றிபிரஸ்: நான்கு மாத கால அட்டவணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? எப்போது அது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது?

பேச்சாளர் நீர்சேர்கி: நிபுணர்கள் குழு உள்ளது. அவர்களுக்கு ஆதரவான குழுவினர் இருக்கிறார்கள். ஆதரவுக் குழுவானது பின்னணியில் இருந்து செயற்படுகிறது. எதிர்வரும் வாரங்களில் நிபுணர்கள் குழுவினர் மீண்டும் சந்திர்ப்பார்கள். இது நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகும். என்ன செய்ய வேண்டும் என்பது செயலாளர் நாயகம் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார்.

இன்னர்சிற்றி பிரஸ்: நான்கு மாத காலப் பகுதி எப்போது ஆரம்பமாகிறது?

பேச்சாளர் நீர்சேர்கி: உங்களுக்கு நான் அதனை அறியத்தருவேன். வேறு ஏதாவது கேள்விகளை எழுப்பினால் நான் சந்தோசமடைவேன்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஐ.நா நிபுணர்குழு தாமதம் ஏன்?: இன்னர்சிற்றிப் பிரஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com