இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயசை தனது நாட்டிற்கான இலங்கையின் பிரதித் தூதுவராக ஏற்றுக்கொண்ட ஜேர்மனி அரசாங்கத்துக்கு எதிராக ஐரோப்பியன் மனித உரிமைகள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுவிற்சர்லாந்துக்கான ஜேர்மனி நாட்டுத் தூதுவர் ஈழத் தமிழர் சுவிஸ் பேரவையின் தூதுக்குழுவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளது.போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தனது நாட்டின் தூதுவராக ஏற்றுக்கொள்வது மனித உரிமைகளை மீறும் செயலென்று குற்றம் சாட்டப்பட்டே இவ்வழக்கை ஈழத் தமிழர் சுவிஸ் பேரவை, ஈழத் தமிழர் நோர்வே பேரவை மற்றும் இன அழிப்புக்கு எதிரான தமிழர் ஆகிய அமைப்புகள் தொடுத்துள்ளன.
கடந்த புதன்கிழமை நடந்த சந்திப்பின்போது, மனித கௌரவத்தின் மதிப்புக் குறித்தும், டயஸைத் தூதுவராக நியமிப்பதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பியத் தமிழர்களின் மனித கௌரவம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும் தமிழ்த் தூதுக்குழுவானது ஜேர்மனி நாட்டுத் தூதுவருக்கு விளக்கிக் கூறியுள்ளது.
கடந்த ஆண்டில் நடந்த போரில் ஜகத் டயஸ் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்குக்கு ஆதாரமாக சில சாட்சியங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
டயஸின் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு அச்சான்றுகள் போதுமானவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to வழக்குத் தாக்கல் செய்த சுவிஸ் தமிழர்களுடன் ஜேர்மன் தூதுவர் சந்திப்பு