இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கைக்கான தகவல்களை திரட்டுவதற்காக அணுகப்படக் கூடிய இலங்கை அதிகாரிகளின் பட்டியல் ஒன்றை தயாரித்து வருவதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் அப்பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ள ஒருவரா எனக் கேட்கப்பட்டுள்ள போது மேற்படி ஐ.நா. வட்டாரம் பதிலளிக்க மறுத்து விட்டது.
எனினும் நிபுணர் குழுவை சந்திக்கத்தயார் என சரத் பொன்சேகா பகிரங்கமாக கூறியுள்ளதால் அவரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என அவ் வட்டாரம் தெரிவித்தது. அணுகப்படக் கூடிய இலங்கை அதிகாரி களின் பெயர்களை நிபுணர்குழு இன்னும் தெரிவு செய்யவில்லை.
நிபுணர் குழு இலங் கை வருவதற்கு விசா வழங்கப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தெரி வித்துள்ளபோதிலும் தொலைபேசி மூலம் தகவல் திரட்டப்படுவதற்கு சாத்தியமுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங் குவதற்காக கடந்த ஜூன் மாதம் பான் கீ மூன் மேற்படி நிபுணர் குழு வை நியமித்தார்.
இக் குழு ஏற்க னவே நியூ யோர்க்கில் தனது முதல் சந்திப்பை நடத்தி யுள்ளதாகவும் இரண்டாவது தடவையாக இம் மாதமுற்பகுதி யில்மீண்டும் அக்குழு சந்திப்பை நடத்த வுள்ளதாகவும் ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் உத்தியோகஸ்தர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவ் நிபுணர் குழு ஒரு விசாரணைக் குழுவா எனக் கேட்கப்பட்ட போது சில உத்தியோகத்தர்கள் நவநீத பிள்ளையின் அலுவலகத்தை சேர்ந்தவர்களாக இரு ந்த போதிலும் இக் குழு ஒரு விசாரணைக் குழு அல்ல எனவும் அவ் வகையிலும் அக் குழு விசாரணைகளை நடத்தப் போவதில்லை அது தெளிவாக ஓர் ஆலோசனைக் குழுவே எனவும் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஐ.நா.விற்கு முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் தகவல் வழங்குவார்?