தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையோ அல்லது சம உரிமையையோ இந்த அரசாங்கம் ஒரு போதும் வழங்கப் போவதில்லை. இதுவொரு இனவாத அடிப்படை வாத ஆட்சியாகும் என்று மக்கள சமரவீர தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கி நாட்டை அபிவிருத்தி செய்யக் கூடிய ஒரே கட்சி ஐ.தே. கட்சியாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக்கட்சி (மக்கள் பிரிவு) தலைவரான மங்கள சமரவீர அக்கட்சியைக் கலைத்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் ஐ.தேசியக் கட்சியில் இணையும் நிகழ்வு நேற்று சிறிகோத்தாவில் நடைபெற்றது. அந் நிகழ்வில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனங்களிடையே சமத்துவத்தை இலக்காக் கொண்டே சிறீலங்கா சுதந்திரக்கட்சியை எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க உருவாக்கினார்.
ஆனால் இன்று இக் கட்சி அடிப்படை வாதிகளினதும் இனவாதிகளினதும் "மடமாக" மாறிவிட்டது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப் போவதுமில்லை. சம உரிமைகளை வழங்கப் போவதுமில்லை.
அத்தோடு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதிலும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதில்லை. அத்தோடு சுதந்திரக் கட்சி இன்று தனியொரு குடும்ப ஆதிக்கத்திற்குள் சிக்கிச் சின்னாபின்னமாகியுள்ளது.கடவுள் துணை" என்ற பெயர்ப் பலகையை லொறியின் முன்னால் மாட்டிக் கொண்டு இரவில் கள்ளச் சாராயத்தை கடத்தும் லொறியைப் போன்று சுதந்திரக் கட்சி மாறியுள்ளது. மனித உரிமைகள், ஊடகச் சுதந்திரம், ஜனநாயகம் மீறப்படும் நாடுகளின் பட்டியலில் இன்று எமது நாட்டுக்கும் இடம் கிடைத்துள்ளது.
அத்தோடு சர்வதேச நாடுகளிலிருந்து நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். அரச ஊழியர்களை மரத்தில் கட்டி அடிக்கும் காட்டுச் சட்டம், நாட்டில் இன்று தலைதூக்கியுள்ளது. எனவே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லவும் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கக் கூடிய ஒரே கட்சி ஐ.தேசியக் கட்சியாகும். எதிர்காலத்தில் ஐ.தே.கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கப்போவதில்லை: மங்கள சமரவீர