இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எதிர்வரும் செப்ரம்பர் மாதம் நடைபெறும் ஐ.நாவின் பொதுச்சபையில் உரையாற்றுவதற்கு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அரசியல் ரீதியாக ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள மோதல்களால் மகிந்தா அங்கு செல்வதா அல்லது அதனை தவிர்த்துக் கொள்வதா என்பது தொடர்பில் அரச தலைவர் செயலகத்திற்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் பாரிய கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் நியூயோர்க்கை தளமாக கொண்ட ஆசிய சமூக அமைப்பு மத்தியில் மகிந்தா உரையாற்றவுள்ளதாக ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருக்கும் போதும் அதனையும் கைவிட சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த வருடம் ஆசிய சமூக அமைப்பு மத்தியில் சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கா உரையாற்றியபோது அதில் கலந்து கெண்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடுமையான கேள்விகளை தொடுத்திருந்தனர்.
எனவே இந்த வருடமும் இவ்வாறான கேள்விகள் கேட்கப்படலாம் என சிறீலங்கா அரசு அச்சமடைந்துள்ளது.
இருந்தபோதும், ஐ.நாவுக்கும் – சிறீலங்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்தால் மகிந்தா தனது பயணத்தை முற்றாக தவிர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஐ.நாவுக்கான விஜயத்தை மகிந்தா இறுதி நேரத்தில் கைவிடலாம்?