கிளிநொச்சி, கனகபுரம் கோழிப்பண் ணைப் பகுதியில் வீட்டுக்கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் உருக் குலைந்த நிலையில் நேற்று நண்பகல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.பாலசுப்பிரமணியம் நிமலன் (வயது 50) என்பவரது சடலமே மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
கனகபுரம் கோழிப்பண்ணையில் மீள் குடியமர்ந்த இந்த நபர் தனிமையில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக இவரைக் காணாத நிலையில் நேற்றைய தினம் கிணற்றில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்ட பொலிஸார் மரண விசாரணைகளுக்காக வவுனியா மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கிளி.கனகபுரத்தில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு