எம்.சி.சன்.சி கப்பலில் கனடாவை எந்த நேரமும் வந்து அடையலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஈழத் தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைக்கின்றமைக்கான ஏற்பாடுகளை கனேடிய அரசு முன்னெடுத்து வருகின்றது.இவர்களை Maple Ridge மாநகரத்தில் அமைந்திருக்கும் இரு தடுப்பு முகாம்களில் ஆண்கள் வேறு, பெண்கள் வேறாக அடைத்து வைக்கின்றமைக்கு பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Fraser Regional Correctional Centre இல் ஆண்களும், Alouette Correctional Centre for Women இல் பெண்களும் என இந்த ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட உள்ளனர். இச்சிறைச்சாலைகளை இவர்களுக்காக எந்த நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அரச உயர் மட்டத்தில் இருந்து அறிவுறுத்தல் வந்துள்ளது என Maple Ridge மாநகரத்தைச் சேர்ந்த அரச உயர் அதிகாரிகளில் ஒருவரான John Leeburn தெரிவித்துள்ளார்.
அத்துடன் வரும் நாட்களில் 500 பேர் வரையான ஈழ அகதிகளை குறிப்பாக ஆண்களை அடைத்து வைக்கக் கூடிய வகையில் முகாம்களை ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சிறைச்சாலை நன்னடத்தை அதிகாரிகளுக்கும், சிறைச்சாலைக் காவலர்களுக்கும் இந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இக்கப்பல் எப்போது கனடாவை வந்து அடையும் ? என்பதை துல்லியமாக சொல்ல முடியாமல் இருக்கின்றது என்றும் அவர் கூறி உள்ளார். இக்கப்பல் கனேடிய பொலிஸாராலும், கனேடிய எல்லைப் பாதுகாப்புப் படையினராலும் இந்த வாரமோ, அல்லது அதற்கு.... பின்னரோ முற்றுகையிடப்படும் என்று அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கனடாவின் விக்டோரியா துறைமுகத்தில் இக்கப்பல் முதலில் நிறுத்தி வைக்கப்படும் என்றும் எப்போது இந்த இலங்கையர்கள் பின்னர் Maple Ridge முகாம்களுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்பது தெரியாது என்றும் அந்த அதிகாரி சொல்லி உள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கப்பல் அகதிகளை அடைத்து வைக்க கனடாவில் சிறைச்சாலைகள்