நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ரோஜா ஹாலில் 13-08-2010 அன்று தொடங்கி 15-08-2010 வரை இக்கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சியின் துவக்க விழா 13-08-2010 அன்று காலை 10 மணியளவில் நடக்கிறது.
நிகழ்வுக்கு, ம.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. கே.எம்.ஏ.நிஜாம் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. ப.ஆ.சரவணன், இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.சண்முகவேல், நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.சிவக்குமார், புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளர் திரு. எம்.எஸ்.செல்லப்பா, ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் மு.சுப்புரத்தினம், தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ் ஈழன் ஆகியோர் தொடக்க விழாவிற்கு முன்னிலை வகிக்கின்றனர்.
கண்காட்சியைத் திறந்து வைத்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ சிறப்புரையாற்றுகிறார்.
எழுத்தாளர் தி.க.சி., பேராசிரியர் தொ.பரமசிவம், மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் எம்.பிரட்டோ, யாதுமாகி திரு. லேனா குமார் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். ஓவியர்
புகழேந்தி ஏற்புரை நிகழ்த்துகிறார்.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஓவியங்களை பார்வையாளர்கள் பார்த்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, திரு.டி.இரேமேஷ், வழக்கறிஞர் எம்.அரிபாலகிருஷ்ணன், மணப்படை எம்.மணி, ஆட்டோ பாலு, சேந்தி எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to நெல்லையில் ஓவியர் புகழேந்தியின் போர் முகங்கள் ஓவியக்காட்சி